ஆணையாளர் நாயகம் கைது!
இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் தரவுக்கட்டமைப்பில் சட்டவிரோதமான முறையில் மாற்றங்களைச் செய்து, வாகனங்களைச் சட்டவிரோதமாகப் பதிவு செய்தமை உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளை அடுத்தே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் .
இந்த விவகாரம் தொடர்பில் ஏற்கனவே திணைக்களத்தின் சில உயர் அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆணையாளர் நாயகமும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment