தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்திய ரஜீவன் எம்.பி
நல்லூர் பின் வீதியில் தியாக தீபத்தின் நினைவிடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பகத்திற்கு நேரில் சென்ற தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன் அங்கிருந்த தியாக தீபத்தின் திருவுருவ சிலைக்கு அஞ்சலி செலுத்தி ஆவண காப்பகத்தினை பார்வையிட்டார்.
தியாக தீபத்தின் நினைவுகளை தாங்கிய ஆவண காப்பகம் இன்றைய தினம் சனிக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்ட நிலையில் , ஆவண காப்பகத்திற்கு வருகை தந்து தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.
அதேவேளை கடந்த வியாழக்கிழமை தியாக தீபத்தின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த சென்ற கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இடைமறித்து , அஞ்சலி செலுத்த விடாது திருப்பி அனுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment