இளங்குமரன் கைது!
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புகுழுக்கூட்டத்தில் பங்கெடுத்திருந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பரந்தன் இந்து மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் கடமையிலிருந்த கிராம அலுவரை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பொது மக்கள் முன் தாக்கியமை தொடர்பிலேயே கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் சமைத்த உணவு பொதிகளுடன் வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அவற்றை மக்களுக்கு வழங்கப்போவதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் பிரதேச செயலாளர் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் பணிப்புக்கமைய வெளியிலிருந்து சமைத்த உணவுகள் கொண்டு வந்து வழங்குவதனை தவிர்க்குமாறும் அவ்வாறு வழங்குவதாக இருப்பினும் உரிய சுகாதார முறைப்படி இருக்க வேண்டும் என்பதனை உறுதிப்படுத்த வேண்டும் என்பதனையும் கிராம சேவையாளர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கோபமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் தன் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்து கிளிநொச்சி காவல்; நிலையத்தில் கிராம அலுவலர் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டிருந்த காவல்துறையால் இளங்குமரன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment