நன்றி மறந்த அதிகாரி!



இலங்கை முப்படைகளிற்கும் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துள்ள கிளிநொச்சி மாவட்ட செயலர் முரளிதரன் பணியின் போது தாக்கப்பட்ட தனது கிராமசேவையாயர் பற்றி மூச்சுக்கூட விடமறந்த பரிதாபம் அரங்கேறியுள்ளது.

குpளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் போவோர் வருவோர் எல்லோருக்கும் நன்றி மறவாது நன்றிகளை தெரிவித்த மாவட்ட செயலர் முரளிதரன் பணியின் போது இடைத்தங்கல் முகாமில் வைத்து தாக்கப்பட்ட கிராம அலுவலரை பற்றி வாயே திறக்க மறுத்துவிட்டார். 

ஆண்மைய புயல் அனர்த்தத்தின் போது கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பரந்தன் இந்து மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் கடமையிலிருந்த கிராம அலுவரை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பொது மக்கள் முன் தாக்கியமை தொடர்பில் கைது செய்யபப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் சமைத்த உணவு பொதிகளுடன் வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அவற்றை மக்களுக்கு வழங்கப்போவதாக தெரிவித்திருந்தார். 

ஆனால் மாவட்ட செயலர் முரளிதரனின் பணிப்புக்கமைய வெளியிலிருந்து சமைத்த உணவுகள் கொண்டு வந்து வழங்குவதனை தவிர்க்குமாறும் அவ்வாறு வழங்குவதாக இருப்பினும் உரிய சுகாதார முறைப்படி இருக்க வேண்டும் என்பதனை உறுதிப்படுத்த வேண்டும் என்பதனையும் கிராம சேவையாளர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கோபமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் தன் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்து கிளிநொச்சி காவல்; நிலையத்தில் கிராம அலுவலர் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டிருந்த காவல்துறையால் இளங்குமரன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்றைய மாவட்ட செயலகத்தில் முப்படைகள் முதல் சிங்கள அதிகாரிகள் வரை நன்றி தெரிவித்திருந்த மாவட்ட செயலர் முரளிதரன் மூச்சுக்கூட தாக்கப்பட்ட கிராமசேவையாளர் பற்றி வாயே திறக்கவில்லை.

ஆட்சியில் யார் இருந்தாலும் கூழைக்கும்பிடு போடும் அரச அதிகாரிகளிற்காகவா நாம் அடி வாங்கி பணியாற்றினோமென சீற்றத்துடன் கருத்துக்களை பதிவு செய்துவருகின்றனர் கிராமசேவையாளர்கள்.


No comments