முன்னாள் முண்ணி பச்சைக்கொடி!
திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு கண்காட்சியினை மணிவண்ணன் அணி ஆரம்பித்துள்ள நிலையில் நல்லூர் திலீபன் நிகழ்வில் அஞ்சலி செலுத்தியுள்ளார் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன்.
முன்னதாகதியாக தீபம் திலீபன் அண்ணனின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்க வந்த அமைச்சர் சந்திரசேகருக்கு அஞ்சலி செலுத்தும் உரிமையை தமிழ்க் காங்கிரஸ் தடுத்திருந்தமை சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது.
யாரும் யாரையும் அஞ்சலிக்கலாம்; அதுதான் மனித மாண்பு. திலீபன் அண்ணன் போராடிய காலத்தில் அவருக்கு எதிராக நின்ற பலர் இன்று நினைவேந்தல்களில் பங்கேற்கின்றனர். அவர்களை முன்னணியே தேர்தல் அரசியலுக்காக அருகில் நிறுத்திக் கொள்கிறது. ஆனால், மற்றவர்களை அனுமதிக்க மறுப்பது எத்தகைய முரண்பாடு? ஒரு மாவீரனின் – தியாகியின் நினைவேந்தலை வாக்குக் கணக்குப் பொருட்டு அரசியல் ஆக்கிரமிப்பு செய்வது ஒருபோதும் மன்னிக்க முடியாத குற்றமாகும். இது மனித மாண்புகளை மீறிய காட்டுமிராண்டித்தனமே தவிர வேறில்லையென மற்றொரு தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் விமர்சனங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment