சுவிஸில் குதூகலம்!
ஜெனிவாவில் ஐநா மனித உரிமைச் சபை அமர்வு இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சூழலில், சுவிஸ்லாந்து அரச ஏற்பாட்டில் ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்க உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய கட்சிகளின் சில உறுப்பினர்கள் அங்கு சென்றுள்ளமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
யாழ் மாநகர சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட மூத்த விரிவுரையாளர் கபிலன் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் தமிழ் உறுப்பினர் சுரேஸ்பிறேமச்சந்திரன் உள்ளிட்டவர்களும் பயணத்தில் இணைந்துள்ளனர்.
அதேவேளை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சத்தியலிங்கம் உள்ளிட்ட சிலரும் அங்கு சென்றிருக்கின்றனர்.
ஈழத்தமிழர் பிரச்சினைத் தீர்வு பற்றிய உள்ளக உரையாடல் என்று கூறப்படுகின்ற நிலையில் அதே போன்ற கலந்துரையாடல் முறைமை 2013 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் இடம்பெற்றிருந்தது.
அதேபாணியில் ஜநா அமர்வின் போது தமிழ் தேசியம் பேசும் அரசியலாளர்கள் களமிறக்கப்பட்டமை பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
Post a Comment