இந்திய மீனவர்கள் வருகின்றனர்?
கடந்த மூன்று மாதங்களாக இந்திய கடற்றொழிலாளர்களின் இழுவை படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் வரவில்லை என இலங்கை கடற்படை தளபதி தவறான கருத்தினை கூறுவதாக வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சங்கம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
இந்திய இழுவைப்படகுகள் கடந்த மூன்று மாதங்களாக இலங்கை கடற்பரப்பிற்குள் வரவில்லை என கடற்படை தளபதி கூறியுள்ளார். அந்தக் கருத்தினை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஏனென்றால் கடந்த ஒரு மாத காலத்துக்குள் நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவர்களை கைது செய்ததும் கடற்படையினரே. தொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் நடைபெறுகின்றது.
இந்திய இழுவைப் படகுகளை கைது செய்வதற்கு கடற்படையினர் மேற்கொள்ளும் தொடர்ச்சியான முயற்சிகளை நாங்கள் வரவேற்கின்றோம். இந்திய இழுவைப் படகுகளிடமிருந்து கடற்படையினர் எம்மை பாதுகாப்பார்கள் என நம்புகின்றோம் எனவும் மீனவ சங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
Post a Comment