மீண்டும் கொழும்பில் கிளைமோர்!



யுத்தகாலப்பகுதியை போன்று மீண்டும் கிளைமோர் குண்டுகளை வெடிக்க வைத்து கொலைகளை அரங்கேற்ற தென்னிலங்கை தயாராகிவருகின்றது.

அவ்வகையில் சிறைச்சாலை பஸ்ஸை குறிவைத்து கிளேமோர் குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தமை தொடர்பிலான தகவல் அம்பலமாகியுள்ளது.

பாதாள உலகத் தலைவர் ஒருவரை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது சிறைச்சாலை பஸ்ஸை குறிவைத்து கிளேமோர் குண்டுத் தாக்குதலை நடத்தி கொல்லத் திட்டமிட்டிருந்ததாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதாள உலக கும்பலுக்கு மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட  இராணுவ லெப்டினன்ட் கேணலிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது தகவல் தெரியவந்துள்ளது.

சந்தேகத்திற்குரிய லெப்டினன்ட் கேணல்,  இரண்டு கிளேமோர் குண்டுகளை கொடுத்திருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

சிறைச்சாலை பஸ் புதுக்கடை நீதிமன்றத்தை நெருங்கும் போது, நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள சாலையில் ஒரு மோட்டார் சைக்கிளில் கிளேமோர் குண்டை மறைத்து ரிமோட் கண்ட்ரோலைப் பயன்படுத்தி வெடிக்க வைப்பதே பாதாள உலகக் கும்பலின் திட்டமாக இருந்ததாக தெரிவிக்கின்றனர்.


No comments