புத்தர் படையெடுக்கிறார்!

 


திருகோணமலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரதான கடற்கரையில் வைத்த புத்தர் சிலை தொடர்ந்து இருப்பதற்கு கரையோர பாதுகாப்பு திணைக்களம் சம்மதம் தெரிவித்துள்ளது.

கரையோர பாதுகாப்பு திணைக்களம் சட்டவிரோத புத்தர் சிலையை அகற்றுமாறு தொடுத்த வழக்கில் இருந்து தற்பொழுது பின் வாங்கியுள்ளது.

சுற்றுலாத்துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துவரும் திருகோணமலை கடற்கரை புத்தர் சிலைகளால் நிரம்பிவருகின்றது.

மஹிந்த ராஜபக்சவால் வழங்கப்பட்ட புனிதபூமி என்கிற உறுதிப்பத்திரத்தை ஆதரமாக ஆக்கிரமிப்பாளர்கள் காண்பித்துவருகின்றனர். 

எனினும் முன்னதாக தையிட்டி விகாரை பிரச்சினையை தீர்ப்பதாக கூறிவரும் அனுர அரசு திருகோணமலையில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ள விவகாரத்தை வெற்றிகரமாக கையாண்டிருப்பதாக கூறிவருகின்றது.

இதனிடையே கணக்காய்வாளர் நாயகமாக ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட கேணல் தர படை அதிகாரியொருவருக்கு ஆதரவாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கை தூக்கியமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது

எனினும் சஜித் பிறேமதாசா உட்பட எதிர்கட்சி உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் எதிர்த்து வாக்களித்த படை அதிகாரியை கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க மேற்கொண்ட முயற்சியை தோற்கடித்துள்ளனர்.


No comments