அரச பயணமாக இங்கிலாந்து வந்தார் டிரம்ப்!
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது வரலாற்று சிறப்புமிக்க இரண்டாவது அரசு பயணமாக இங்கிலாந்து வந்தடைந்துள்ளார், இது அரச கொண்டாட்டங்கள், வர்த்தக பேச்சுவார்த்தைகள் மற்றும் சர்வதேச அரசியல் ஆகிய விடயங்கள் உள்ளடங்கிய வருகயைாக இது இருக்கும்.
இந்த வருகையை ஒரு மரியாதை என்று விவரித்தார் மற்றும் இங்கிலாந்துடன் எனது உறவு மிகவும் நன்றாக உள்ளது என்று கூறினார்.
வர்த்தக ஒப்பந்தத்தை கொஞ்சம் செம்மைப்படுத்த முடியுமா என்று அவர்கள் பார்க்க விரும்புகிறார்கள். நான் அவர்களுக்கு உதவ விரும்புகிறேன் என்று டிரம்ப் கூறினார். ஜனாதிபதியின் வருகை தொடங்கியவுடன் பல பில்லியன் அமெரிக்க தொழில்நுட்ப முதலீட்டு ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த பயணத்தின் முக்கிய நோக்கம் எனது நண்பர் மன்னர் சார்லஸைப் பார்ப்பது என்று டிரம்ப் கூறினார்: அவர் நாட்டை மிகவும் சிறப்பாகப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார், மிகவும் நேர்த்தியான மனிதர் என்று டிரம் கூறினார்.
Post a Comment