இரான் ஒரு தவறைச் செய்துவிட்டது: மிகப் பொிய விலையைக் கொடுக்க வேண்டும் - இஸ்ரேல் பிரதமர்


ஈரான் ஒரு தவறைச் செய்துவிட்டது அதற்கு ஈரான் மிகப் பொிய விலையைக் கொடுக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

ஈரான் தனது எதிரிகளுக்கு எதிராக பதிலடி கொடுப்பதற்கான தனது நாட்டின் உறுதியை புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் விரைவில் புரிந்துகொள்வார்கள். நாங்கள் நிறுவிய விதியில் நாங்கள் நிற்போம். யார் எங்களைத் தாக்கினாலும்  நாங்கள் அவர்களைத் தாக்குவோம் என்று கூறினார்.

No comments