இஸ்ரேல் டெல் அவிவில் 7 பேர் சுட்டுக்கொலை!
டெல் அவிவ் நகரில் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து தாக்குதலில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர் என்று இஸ்ரேலிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தெற்கு டெல் அவிவில் அரபு-யூதர்களின் கலப்பு பகுதியான ஜாஃபாவில் உள்ள ஒரு பவுல்வர்டில் சந்தேக நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
தாக்குதலாளிகள் இருவரும் துப்பாகியுடன் தொடருந்து நிலையத்திலிருந்து வெளியேறி துப்பாக்கிச் சூட்டை நடத்துவதை தொலைக்காட்சிகள் காண்பித்தன.
இத்தாக்குதலுக்கு எவரும் பொறுப்பேற்கவில்லை, ஆனால் சந்தேக நபர்கள் மேற்குக்கரை நகரமான ஹெப்ரோனைச் சேர்ந்த பாலஸ்தீனியர்கள் என்று இஸ்ரேலிய நிதி மந்திரி பெசலெல் ஸ்மோட்ரிச் கூறினார்.
தற்போது இத்தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு ஹமாஸ் போராளிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் தனது ஏவுகணைகளை ஏவுவதற்கு சற்று முன்பு இந்த தாக்குதல் நடந்தது மற்றும் இரண்டு சம்பவங்களுக்கும் இடையே வெளிப்படையான தொடர்பு எதுவும் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment