எங்களுடன் இனி மோத வேண்டாம்: அடி பலமாக இருக்கும் - ஈரான் அதிபர்
ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் இஸ்ரேல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலை எச்சரித்துள்ளார்.
இத்தாக்குதலானது பிராந்தியத்திற்கான அமைதி மற்றும் பாதுகாப்பு என்ற நோக்கத்துடன் நடத்தப்பட்டது என ஈரான் ஜனாதிபதி தெரிவித்தார்.
இது ஈரானின் சட்டபூர்வமான உரிமைகள் அடிப்படையில், ஈரானிய நலன்கள் மற்றும் குடிமக்களைப் பாதுகாப்பதில் ஒரு தீர்மானமான பதில் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டது என்று மசூத் பெசெஷ்கியன் கூறினார்.
ஈரான் ஒரு போர் வெறியர் அல்ல, ஆனால் எந்த அச்சுறுத்தலுக்கும் எதிராக உறுதியாக நிற்கும் என்பதை இஸ்ரேலிய பிரதமர் அறிந்திருக்க வேண்டும் என்று கூறினார்.
இன்றிரவு தாக்குதல் ஈரானின் திறன்களின் ஒரு காட்சி என்றும் ஈரானுடன் மோதலில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் இஸ்ரேலை எச்சரிக்கிறார்.
Post a Comment