இஸ்ரேல் மீது முதல் அலை இராண்டாவது அலை என் ஈரான் தாக்குதல்!
ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா மற்றும் ஈரானிய புரட்சிகர இராணுவத்தின் தளபதி அப்பாஸ் நில்ஃபோரௌஷான் மற்றும் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதிற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
இதனால் யூதர்கள் நிலக்கீழ் பதுங்குழி அறைகளுக்குள் சென்றனர். அவர்கள் மிகவும் நீண்ட நேரம் பதுங்கு குழிக்குள் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அத்துடன் மத்திய கிழக்குப் பிராந்தியம் முழுவதுமாக போர் பற்றிய அச்சத்தை எழுப்பியது.
நடந்த தாக்குதலின் போது இஸ்ரேல் முழுவதும் அலாரங்கள் ஒலித்தது மற்றும் ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் ஆகிய இடங்களில் வெடிக்கும் சத்தம் கேட்டது.
இஸ்மாயில் ஹனியே, ஹசன் நஸ்ரல்லா மற்றும் நில்ஃபோரூஷன் ஆகியோரின் தியாகத்திற்கு பதிலளிக்கும் விதமாக, நாங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களின் இதயத்தை குறிவைத்தோம் என்று IRGC ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டெல் அவிவிவில் மூன்று இராணுவ தளங்களை குறி வைத்தாக ஈரானியப் புரட்சிகர இராணுவம் தெரிவித்தது.
பல நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் ட்ரோன்கள் மூலம் முதல் அலை இரண்டாவது அலை என தாக்குதல்கள் நடத்தப்பட்டது. முதல் அலையில் 104 ஏவுகணைகள் ஏவப்பட்டன. சில ஊடகங்கள் 400 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் விழுந்து வெடித்தாக கூறியுள்ளன. இரண்டாவது தாக்குதல் சிரியாவின் கோலன் கயிற்ஸ் (Golan Heights) நோக்கியும் வந்தாகக் கூறப்படுகிறது.
பல ஏவுகணைகள் மற்றும் டெல் அவிவில் விழுந்து வெடித்துள்ளன. அத்துடன் இராணுவ விமானத் தளத்திலும் விழுந்து வெடித்துள்ளன.
இஸ்ரேலின் எரிவாயு தயாரிக்கும் நிலையத் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இஸ்ரேலிய இராணுவ மையங்கள் மற்றும் வசதிகள் எங்கள் இலக்குகளாக இருந்தன.
இஸ்ரேல் மீண்டும் தவறு செய்தால் இன்னும் அழிவுகரமான இரண்டாவது அலையை உருவாக்கும் ஈரான் எச்சரித்துள்ளது.
தற்போது ஈரானிய தாக்குதலில் பல இழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானின் தாக்குதல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும இது ஒரு தோல்வியான தாக்கதல் என இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூறியுள்ளன.
Post a Comment