சுன்னாகத்தில் வீதியில் சென்ற பெண்ணின் சங்கிலி அறுப்பு - இராணுவ முகாமில் பணியாற்றுபவர் மடக்கி பிடிப்பு
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி செல்ல முற்பட்ட நபர் வீதியால் சென்றவர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு . பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , மயிலிட்டி இராணுவ முகாமில் சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தராக கடமையாற்றுபவர் என தெரியவந்துள்ளது.
கைதான நபரை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
.jpg)
Post a Comment