நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவு: 228 ஆக உயர்வு!
நேபாள தலைநகர் காத்மண்டுவில் கடந்த வாரம் வரலாறு காணாத மழையால் பாக்மதி ஆற்றின் கரையை உடைத்து வெள்ளத்தில் மூழ்கியது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 228 ஆக உயர்ந்துள்ளது. குறைந்தது 25 பேர் காணவில்லை மேலும் 158 பேர் காயமடைந்துள்ளனர் என நேபாள காவல்துறையின் தலைமையகம் தெரிவித்துள்ளது.
வியாழன் முதல் ஞாயிறு வரை, காத்மாண்டு பள்ளத்தாக்கில் சுமார் 240 மிமீ (9.4 அங்குலம்) மழை பதிவாகியுள்ளது.
காத்மாண்டுவின் சில பகுதிகளில் 322.2 மிமீ (12.7 அங்குலம்) வரை மழை பதிவாகியுள்ளது.
Post a Comment