டென்மார்க்கில் இஸ்ரேலிய தூதரகம் அருகே குண்டு வெடிப்பு!

டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ள இஸ்ரேலியத் தூதரம் அருகே நேற்றிரவு இரண்டு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன என

காவல்துறையினர் இன்று புதன்கிமை தெரிவித்தனர்.

இந்த வெடிப்பில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர். வெடிப்புக்கான காரணங்கள் இன்றும்தெளிவாகத் தெரியவரவில்லை.

இக்குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் 3 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோபன்ஹேகன் சென்ட்ரல் ஸ்டேஷனில் ஒரு தொடருந்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். மற்றொருவர் கோபன்ஹேகனின் வேறொரு இடத்தில் கைது செய்யப்பட்டார்.

ஆயுதமேந்திய இராணுவ வீரர்கள் கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதி சுற்றி வளைக்கப்பட்டது பாதுகாப்பை வழங்கினர்.

தூதரகத்திற்கு அருகில் நடந்த பயங்கரமான சம்பவத்தால் அதிர்ச்சியடைந்தேன் என்று டென்மார்க்கிற்கான இஸ்ரேலின் தூதர் டேவிட் அகோவ் கூறினார்.

குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு அருகில் உள்ள யூத பள்ளி ஒன்று புதன்கிழமை மூடப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

அண்டை நாடான ஸ்வீடனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த வெடிப்புகள் நிகழ்ந்தன. தூதரகம் இரவோடு இரவாக துப்பாக்கிச் சூடுகளால் தாக்கப்பட்டதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன என்று ஸ்டாக்ஹோம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

எவருக்கும் காயங்கள் ஏற்பட்வில்லை. யாரும் கைது செய்யப்படவில்லை, ஆனால் நகரம் யூத மற்றும் இஸ்ரேலிய தளங்களைச் சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறை அதிகரித்துள்ளது.


No comments