கொழும்பில் போட்டியிட தேவையில்லை!
வடக்கு – கிழக்கிற்கு வெளியில் தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகள் போட்டியிட முயற்சிப்பதென்பது தமிழ்த் தேசிய அரசியலை வலிந்து தூக்கிலிடுவதற்கு ஒப்பானது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.
அத்தகைய நகர்வுகள் தமிழ்த் தேசிய இறைமை அரசியலை அடையாள அரசியலிற்குள் சுருக்கும் முயற்சிகளாகும் என்பதைப் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளோம் எனவும் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழரசுக்கட்சி உள்ளிட்டவை கொழும்பிலும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளன.
அத்தகைய நடவடிக்கைகளை கண்டித்தே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்றைய தினம் காரசாரமான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
வடகிழக்கை மையப்படுத்தியே இதுவரை தேர்தலில் களமிறங்கியிருந்த தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஈழமக்கள் ஜனநாயக்கட்சியென்பவை இம்முறை கொழும்பிலும் வேட்பாளர்களை களமிறக்கவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment