சிவப்பு வெழுக்க தொடங்கியது!



இலங்கை துறைமுக அதிகார சபையின்  பதவி நியமனங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த இடமாற்றத்தை உடனடியாக நிறுத்தி, விரிவான அறிக்கையை மூன்று நாட்களுக்குள் அளிக்குமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனிடையே முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் சிறிமேவன் சரத் சந்திர ரணசிங்க துறைமுக அதிகார சபையின் தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார் 

திருகோணமலை 'கன்சைட்' வதை முகாமில்  கடற்படை அதிகாரிகளால் பணத்திற்க்காக படுகொலை செய்ய பட்ட 11  கொழும்பு தமிழ் மாணவர்கள் தொடர்புபட்ட வழக்குடன்  சம்பந்தப்பட்ட கடற்படை அதிகாரிகளுக்கு உதவிய மூத்த அதிகாரியாக  அடையாளம் காணப்பட்டு இருந்தார் .



குறிப்பாக இவ் வழக்கின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான சுமித் ரணசிங்க பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் அவரை  அட்மிரல் சிறிமேவன் சரத் சந்திர ரணசிங்க  பதவியுர்த்தி இருந்தார்

அதே போன்று தனது மேலதிகாரிகளுடன் பரிமாறிய இரகசியக் கடிதம் ஒன்றின் மூலம்           பிணையிலிருந்த  சுமித் ரணசிங்கவை கடற்படையின் புலனாய்வுப் பணியில் ஈடுபடுத்த அட்மிரல் சிறிமேவன் சரத்  சந்திர ரணசிங்க ஏற்பாடு செய்து இருந்தார் 

இது மாத்திரமின்றி பிணையில் விடுவிக்கப்பட்ட சுமித் ரணசிங்கவிற்கு  ஆயுதமேந்திய பாதுகாப்பு வழங்கவும் அட்மிரல் சிறிமேவன் சரத் சந்திர ரணசிங்க உத்தரவு பிறப்பித்திருந்தார்

சுமித் ரணசிங்கவிற்கு எதிராக சாட்சியமளித்த கடற்படை அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்களை உளவு பார்க்கும் வசதியையும் அட்மிரல் சிறிமேவன் சரத்சந்திர ரணசிங்க சுமித் ரணசிங்கவிற்கு வழங்கி இருந்தார் 

அதே சமயம்  2009 -2012 காலப்பகுதியில் திருகோணமலை 'கன்சைட்'  வதை முகாமில் நடந்த பல விடயங்கள் தொடர்பாக அறிந்திருந்த  அதிகாரிகளில்  ஒருவராக அட்மிரல் சிறிமேவன் சரத்சந்திர ரணசிங்க அவர்களை The International Truth and Justice Project அடையாளம் காட்டி இருந்தது 

இந்த உண்மைகளுக்கு மத்தியில் அரச நிறுவனங்களின் தலைவர்களாக தங்கள் கட்சி உறுப்பினர்களையும் நண்பர்களையும் நியமித்து வரும் ஜேவிபி அதன் தொடர்ச்சியாக அட்மிரல் சிறிமேவன் சரத்சந்திர ரணசிங்க அவர்களை இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவராக நியமித்து உள்ளது


No comments