ரணில் கோத்தபாயாவின் ஆள்: முன்னாள் அமைச்சர்!

கடந்த கால துணை ஆயுதக்குழுக்கள் ஆதரவில் களமிறங்கியுள்ள ரணில் விக்கிரமசிங்கவிற்கு கோத்தபாய ஆதரவு வழங்கிவருகின்றமை

அம்பலமாகியுள்ளது.

ராஜபக்ச ஆதரவுடனேயே ரணில் ஜனாதிபதி தேர்தலில் குதித்துள்ளமை இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்குமாறு கோட்டாபய ராஜபக்சவே தன்னிடம் கூறியதாக முன்னாள் மகாவலி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க என்பவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

இவ்வாறான அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் ராஜபக்ச தரப்பும் தனக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டு வந்தனர்.

நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையான ஊழல்வாதிகளுடன் அரசியல் செய்ய தாம் தயாரில்லை அதனால் தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்தேன்” என முன்னாள் மகாவலி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச தரப்பிலிருந்து நாமல் ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள நிலையில் கோத்தபாய ராஜபக்ச முன்னாள் மகாவலி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்கவிடம் ரணிலை ஆதரிக்க சொன்னமை சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.

No comments