அதானிக்கு ஆப்பு:அனுர
தேர்தலில் தான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் இந்தியாவின் அதானி நிறுவனத்தின் காற்றாலை மின்திட்டத்தினை இரத்துசெய்வேன் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
அதானி நிறுவனத்திடம் இருந்து பல மடங்கு அதிகரித்த விலையில் இலங்கை மின்சாரசபை எரிசக்தியை கொள்வனவு செய்கிறது என்று அநுர குமார குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதானி நிறுவனத்தின் திட்டத்தின் அளவு பெரியது என்பதை கருத்தில் கொள்ளும் போது அதன்செலவீனங்கள் குறைவாக இருக்கவேண்டும், ஆனால் அதற்கு மாறானா நிலை காணப்படுகின்றமையால் நாங்கள் அந்த ஒப்பந்தத்தை நிச்சயமாக இரத்துச்செய்வோம் என அனுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் இலங்கையின் வடபகுதியில் மன்னார் மற்றும் பூநகரியில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தினை முன்னெடுப்பதற்கு 2023 பெப்ரவரியில் இலங்கையின் முதலீட்டு சபை அனுமதி வழங்கியது.
எனினும் காற்றாலை திட்டம் சட்டரீதியான சவால்களை எதிர்கொண்டுள்ளதுடன் தற்போது உயர்நீதிமன்ற மதிப்பாய்வில்; உள்ளது.
ஆயினும் தடைகளை தாண்டி திட்டம் அடுத்துவரும் மாதங்களில் ஆரம்பிக்கப்படலாமென்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment