மாவை அரசியல்: காலையில் அரியம் - மாலையில் சஜித்!

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிறேமதாசாவை ஆதரிப்பதென்ற நிலைப்பாட்டை வலியுறுத்தி விசேட அறிக்கையொன்றை இலங்கை
தமிழரசுக்கட்சி இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது.வவுனியாவில் அறிக்கை வெளியிடப்பட்ட போது கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா பிரசன்னமாகியிருந்தார்.
முன்னதாக காலை பொதுவேட்பாளர் அரியநேந்திரனை சந்தித்து மாவை சேனாதிராசா தனது ஆதரவை தெரிவித்திருந்தார்.
எனினும் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசாவும், சி.சிறீதரனும் தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என் வலியுறுத்தியிருந்தனர்.
அதேவேளை சி.சிறீதரன் சஜித் எதிர்ப்பு தீர்மானத்தை முன்வைத்ததுடன் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக தான் பிரச்சாரம் செய்யவுள்ளதாக வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து ஆராயப்பட்டது. தமது அபிலாசைகளுக்கு மிகவும் அண்மித்ததாக சஜித் பிரேமதாசவின் கொள்கைப் பிரகடனமே காணப்படுவதாக சுமந்திரன் தெரிவித்திருந்தார்.தமிழரசுக்கட்சியின் தீர்மானத்தை நான் எதிர்க்கிறேன் என சி.சிறீதரன் தெரிவித்த போதும் இன்றைய கூட்டத்தில் ஐந்து பேர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாட்டில் இருந்தார்கள்.
அதன் தொடர்ச்சியாகவே ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிப்பதாக இறுதி முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment