கடந்த 7 நாட்களில் அமெரிக்காவின் மூன்று MQ-9 ரீப்பர் டிரோனைச் சுட்டு வீழ்த்திய ஹூதிகள்


ஏமனின் நாட்டில் உள்ள ஹூதிப் போராளிகள் அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாகக் கூறினர். அத்துடன் ஹூதிக்களின் வான் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோனின் காணொளிக் காட்சிகளையும் அவர்கள் வெளியிட்டனர். அதில்  MQ-9 ரீப்பர் ட்ரோன் வானத்தில் வெடித்து பற்றி எரிந்தவாறு தரையில் விழுந்தது. 

தரையில் விழுந்த டிரோன் தொடர்ந்து எரிந்துகொண்டிருக்க அதைச் சுற்றி ஹூதிப் போராளிகள் நிற்கின்ற காட்சிகளும் வெளியாகியுள்ளன.

ஏமனின் தென்மேற்கு தாமர் மாகாணத்தில் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஹூதிகள் அறிவித்தனர். 

ஏமனில் மட்டும் ஹூதிப் போராளிகளால் சுட்டு வீழ்த்ப்பட்ட 10வது  MQ-9 ரீப்பர் ட்ரோன் இதுவாகும்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் 72 மணி நேரத்தில் இரண்டு MQ-9 ரீப்பர் ட்ரோனை ஹூதிகள் சுட்டு வீழ்த்தியதாக அறிவித்திருந்தனர்.

கடந்த 7 நாட்களில் ஹூதிகளால் மூன்று MQ-9 ரீப்பர் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக  ஹூதியின் இராணுவ செய்தித் தொடர்பாளர் ஜெனரல் யஹ்யா சாரி தெரிவித்தார்.

ஹூதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட 10 டிரோன்கள் குறித்தும் அமெரிக்கா இதுவரை அமைதி காத்து வருகிறது. டிரோன்களை இழந்தமை குறித்து எதுவித கருத்தையும் அவர்கள் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments