மொட்டு மற்றும் கை தனித்து:ரணில் தனித்து!



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது ஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலில் தனித்து களமிறங்க தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவை களமிறக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் யார் என்பது தொடர்பிலான அறிவிப்பை வெளியிடுவோம் என முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

உரிய நேரம் வரும் போது எமது வேட்பாளர் யார் என்பதையும் அறிவிப்போம். மிகவும் பலம்வாய்ந்த ஒரு வேட்பாளரை நாம் முன்னிறுத்த உள்ளோம். ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் நாம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை. தேர்தலின் பின்னர் எமது அரசாங்கமே அமையும் என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதனிடையே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களினதும்  முன்னாள் ஜனாதிபதிகளினதும் பிரத்தியேக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்காக குழுவொன்றை நியமிக்கப்படவுள்ளது. 

அத்தகைய சகல பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ஒருங்கிணைப்பதற்கும்  மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கும் பரிந்துரைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது .

மறுபுறத்தே ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


No comments