ஒக்டோபர் முதலாம் வாரத்தில் தேர்தல்:சரா
ஜனாதிபதி தேர்தலில் வடகிழக்கு தமிழ் மக்களது வாக்குகளை பெற தென்னிலங்கை வேட்பாளர்கள் படையெடுத்துள்ள நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்பட உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
யாழில் சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரனவுடன் இடம்பெற்ற சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க நிச்சயமாக போட்டியிடுவார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படவுள்ளது. அதேவேளை, இலங்கை தமிழரசு கட்சி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குமா என ரமேஸ் பத்திரன வினவியதாக சரவணபவன் தெரிவித்துள்ளார்
எமது கட்சி பிரதான வேட்பாளர்களுடன் எமது அதிகாரப்பகிர்வு உட்பட உரிமை சார்ந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி எமது மத்திய குழு முடிவெடுக்கும்.
அதேவேளை எமது மத்தியில் தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் நிலவுகின்ற கருத்தியலையும் அவருக்கு தெளிவுபடுத்தினேன். மேலும், யாழ்ப்பாண மக்கள் தமது வாக்குகளை வழங்குவது அவர்களுடைய உரிமை தொடர்பானது என ஈஸ்வரபாதம் சரவணபவன் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தேர்தல் ஆணைக்குழு, அதிகாரத்தை உரியவாறு பயன்படுத்தி, உடனடியாக தேர்தலை நடத்தி, மக்களின் ஜனநாயக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும் என, நாடாhளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment