பாங்காக் ஹோட்டலில் சயனைட் மூலம் 6 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டனர்!!


தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள Grand Hyatt Erawan ஹோட்டலில் நேற்று செவ்வாய்க்கிழமை இறந்து கிடந்த 6 வெளிநாட்டவர்கள் சயனைடு விஷத்தால் இறந்ததாக தாய்லாந்து காவல்துறையினர் இன்று புதன்கிழமை தெரிவித்தனர்.

இறந்தவர்கள் வியட்நாமிய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு அமெரிக்க குடிமக்கள் மற்றும் நான்கு வியட்நாம் பிரஜைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் இந்த வழக்கில் சந்தேக நபர் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இறந்த ஆறு பேரில் ஒருவர் சயனைடு பயன்படுத்தி இந்த சம்பவத்தை ஏற்படுத்தினார் என்பதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம் என்று பாங்காக்கின் பெருநகர காவல்துறை பணியகத்தின் விசாரணைகளின் துணைத் தளபதி நோப்பசில் பூன்சவாஸ் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். ஆறு பேரில் ஒருவர் குற்றம் செய்ததாக நாங்கள் நம்புகிறோம் என்றார்.

சடலங்களின் பிரேதப் பரிசோதனையின் போது சயனைட்டின் தடயங்கள் மற்றும் அறையில் இருந்த குடிநீர் குவளைகள் மற்றும் தேநீர் குவளைகள், சுடுநீர் போத்தல்கள், பால் போன்றவற்றில் சயனைட்டின் தடயங்கள் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

விசாரணைக்கு அமெரிக்க பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் காவல்துறையினர் உதவியதாக அவர்கள் தெரிவித்தனர். பலியானவர்களில் இருவர் அமெரிக்க குடிமக்கள் உள்ளடங்கினர்.


No comments