வெள்ளத்தால் பாதிப்படைந்தது கனடா டொரண்டொ நரகம்!!

கனடாவில் பெய்த கனமழைக்குப் பின்னர் டொரண்டோ நகரம் வெள்ளம் காரணமாக பெரும் இடையூறுகளை எதிர்கொள்கிறது.
வெள்ளம் காரணமாக முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து மையங்கள் மூடப்பட்டுள்ளன. நகர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சொத்துக்களும் சேதமடைந்துள்ளன.
குறிப்பாக நகரின் பல முக்கிய சாலைகள் மற்றும் முக்கிய போக்குவரத்து மையமான யூனியன் நிலையம் ஆகியவை வெள்ளம் காரணமாக மூடப்பட்டன.
வாகனங்கள் அவற்றின் கூரைகள் வரை நீரில் மூழ்கியிருப்பதையும், மீட்புப் பணியாளர்கள் தங்கள் கார்களிலும் லிஃப்ட்களிலும் சிக்கியுள்ள மக்களை அடைய முயற்சிப்பதையும் காணொளிகள் மற்றும் படங்கள் காட்டின.
கிட்டத்தட்ட 6 மில்லியன் மக்கள் வசிக்கும் பெரிய டொராண்டோ பகுதியில் வெள்ளம் குறித்து அவசர சேவைகள் எச்சரிக்கையும் விடுத்துள்ளன.
Post a Comment