கிறீஸ் கப்பல் நிறுவனத்தில் துப்பாக்கிச் சூடு: நால்வர் பலி!!


கிறீஸ் தலைநகர் ஏதென்ஸின் புறநகரில் உள்ள ஒரு நகரத்தில் உள்ள ஒரு கப்பல் நிறுவனத்தின் அலுவலகங்களில் திங்களன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் தாக்குதலாளி உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

தாக்குதலாளி இரண்டு ஆண்களையும் ஒரு பெண்ணையும் கொன்றதாக கிறீஸ் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

EKAM பயங்கரவாத எதிர்ப்புப் படைகள், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, 11:15 மணியளவில் (0915 GMT) முதலில் கட்டிடத்திற்குள் நுழைந்ததன.

துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் வேட்டைத் துப்பாக்கியின் அருகில் சந்தேக நபர் இறந்து கிடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கட்டிடத்தின் வெளியே தாக்குதலாளியின் வானத்தில் ஒரு ஒரு துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்பட்டது.

No comments