எவ்-35 போர் விமானப் பாகங்களை இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்யத் தடை விதித்தது நீதிமன்றம்!!


காசாவில் இஸ்ரேல் படைகளின் இராணுவத் தாக்குதல் குறித்த கவலைகள் காரணமாக இஸ்ரேலுக்கான எவ்-35 போர் ஜெட் பாகங்களின் அனைத்து ஏற்றுமதிகளையும் நிறுத்த வேண்டும் நெதர்லாந்து அரசாங்கத்திற்கு என நெதர்லாந்து மேல் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஏற்றுமதி செய்யப்பட்ட எவ்-35 போர் விமானங்களின் பாகங்கள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான யுத்த மீறல்களில் பயன்படுத்தப்படும் தெளிவான ஆபத்து உள்ளது என்பதை மறுக்க முடியாது என்று நீதிபதி பாஸ் போலே தீர்ப்பில் கூறினார்.

இஸ்ரேல் தனது தாக்குதல்களை நடத்தும்போது பொதுமக்களுக்கு ஏற்படும் விளைவுகளைப் பற்றி போதுமான அளவு கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை நீதிமன்றம் கூறியது.

இந்த தீர்ப்பை நிறைவேற்றிய ஏழு நாட்களுக்குள் நெதர்லாந்து அரசாங்கம் இந்த உத்தரவுக்கு இணங்க வேண்டும் என்று ஹேக்கில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் கூறியது.

எவ்வாறாயினும், இந்த உத்தரவை எதிர்த்து நெதர்லாந்தின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக நெதர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

காஸாவில் போர்க்குற்றம் இழைக்கவில்லை என்று இஸ்ரேல் மறுத்துள்ளது.

Oxfam's Dutch affiliate, PAX மற்றும் The Rights Forum ஆகிய மூன்று மனித உரிமை குழுக்களால் கடந்த ஆண்டு நெதர்லாந்து அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

இசுலாமியப் போராளிக் குழுவான ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேல் செய்யும் போர்க் குற்றங்களுக்கு நெதர்லாந்து உடந்தையாக இருக்கும் என்பதால், போர் விமானத்தின் பாகங்களை வழங்குவதால்,  ஏற்றுமதி உரிமத்தை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று குழுக்கள் வாதிட்டன.


அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல அரசாங்கங்கள் ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்துகின்றன.

No comments