ஜெனீவாவில் சொல்லுவோம்:கஜேந்திரகுமார்!

 


இலங்கை அரசாங்கத்தின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான முறையற்ற கைது செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கின்றோம். அவ்விடயங்களை வருகின்ற மார்ச் மாதம் இடம்பெறும்  மனித உரிமை பேரவையில் அம்பலப்படுத்தி அதனை நேரடியாக பதிவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளோமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கடந்த மாவீரர் வாரத்தில் கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் அவரது மகன் ஜனநாயக போராளி அமைப்பின் நகுலேஸ் ஆகியோரை சிறையில் கஜேந்திரகுமார் சந்தித்திருந்தார்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டுவரமுடியாத விடயங்கள் காவல்துறை அறிக்கையில் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.  சட்டத்தின் கீழே குற்றங்களாக கருதமுடியாத காரணங்களை வைத்து வழக்குகளை தொடரமுடியாது அவ்வாறான நிலையில் இரண்டு மாதங்களாக சிறைச்சாலையில் அடைத்துவைத்திருப்பது ஓர் அடிப்படை மனித உரிமை மீறல்.


அது மட்டுமல்ல இலங்கை அரசு உண்மையான இனவாத நிகழ்ச்சி நிரல் இரட்டை வேடத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.  அதாவது நினைவு கூரலாம் என உலகத்துக்கு சொல்லிக் கொண்டு நல்ல பிள்ளையாக நடித்துக் கொண்டு  மறுபக்கம் நினைவு கூறியவர்களை கைது செய்து அவர்களை பழிவாங்கும் கோணத்தில் செயற்படுவதை உலகத்திற்கு தெரியப்படுத்துவோம் எனவும் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.


No comments