கப்பல் விடுவோம்!
இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இவ்வாரம் ஆரம்பிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இதுவரை சேவையை ஆரம்பிக்க தேவையான ஆரம்ப வேலைத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், குடிவரவு அதிகாரிகள் ஏற்கனவே காங்கேசன் துறைமுகத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
40 வருட இடைவெளிக்குப் பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான படகு சேவையின் உத்தியோகபூர்வ தொடக்கம் ஒக்டோபர் 2023 அன்று நடைபெற்றது.
இந்திய அரசுக்கு சொந்தமான அதிவேகக் கப்பலே சேவையில் இணைக்கப்பட்டுள்ளதுடன் அது 150 பயணிகள் தங்கும் திறன் கொண்டதாகும்.
சுமார் 4மணி நேர பயணத்திற்கு வழமையான விமானசேவை கட்டணத்தை ஒத்த கட்டணமே அறவிடப்பட்டுள்ளது.
முன்னதாக பெரும் பிரச்சாரங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தியாவிற்காக கப்பல் சேவை போதிய பயணிகளில்லாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டு கடந்த நான்கு மாதங்களாக தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment