மீண்டும் காற்றாலை கதை?



இலங்கையின் வட மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டை நிலையான முறையில் முன்னெடுப்பதற்கான மூலோபாய சுற்றுச்சூழல் முயற்சி மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்திய சார்பு அதானி குழும முதலீட்டை வெளியேற்றிய அனுர அரசு தற்போது சீன சார்பு முதலீட்டாளர்களிற்கு சந்தை வாய்ப்பினை தோற்றுவிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இலங்கையின்; எரிசக்தித் தேவையை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பூர்த்தி செய்யும் நோக்கோடும், பிராந்தியத்தில் தனியார் துறை முதலீடுகளை ஊக்குவித்து, மூலோபாய திட்டமிடலை வலுப்படுத்தும் நோக்கத்தோடும் இலங்கை நிலைபேறான எரிசக்தி அதிகாரசபையினால் முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியுடன், மத்திய சுற்றாடல் அதிகாரசபை கடந்த 2025 செப்ரெம்பர் மாதத்தில் வெளியிட்ட வழிகாட்டுதல்களுக்கு அமைய இந்த மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

முன்னதாக தீவகப்பகுதிகளில் சீன அரசினால் முன்னெடுக்கப்படவிருந்த புதுப்பிக்கப்படத்தக்க எரிசக்தி மின் உற்பத்தி முயற்சிகள் இந்தியாவினால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.

ஆயினும் நீண்ட இழுபறிகளின் பின்னராக நெடுந்தீவின் சோலார் மின் உற்பத்தி மையமொன்று தற்போதே நிறுவப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


No comments