டெங்கு கட்டுப்பாட்டினுள் இல்லையா?



இலங்கையின் வடமாகாணத்தில் டெங்கு தாக்கம் உச்சமடைந்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேலும் இரண்டு டெங்கு மரணங்கள் இன்று பதிவாகியுள்ளது.

கொக்குவில் பகுதியில் மயங்கி விழுந்த, அரியாலை பகுதியை சேர்ந்த செல்வராசா சிந்துஜன் (வயது 31) எனும் இளைஞனை மீட்டு , யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் உயிரிழந்திருந்தார்.

அவரது உடலத்தின் மீதான பரிசோதனையின் போது அவருக்கு டெங்கு தொற்று இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

அதேவேளை முல்லைத்தீவு மல்லாவி பகுதியை சேர்ந்த ஒருவர், டெங்கு நோய் தீவிரமான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இலங்கையின் தென்மாகாணத்தையடுத்து டெங்கு தொற்றின் பரவலில் இரண்டாமிடத்தில் வடமாகாணமே இருந்து வருகின்றது.

ஏனினும் டெங்கு பரவலை கட்டுப்படுத்த வடமாகாண சுகாதார திணைக்களம் அதீத முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றபோதும் மரண எண்ணிக்கை அதிகரித்தேவருகின்றது.


No comments