யாழில் 850 குடும்பங்கள் பாதிப்பு?சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 850 குடும்பங்களை சேர்ந்த 2,910 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ்ப்பாண மாவட்ட உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக சங்காணை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதி மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, அங்கு 279 குடும்பங்களை சேர்ந்த 950 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் 234 குடும்பங்களை சேர்ந்த 766 பேரும், கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் 180 குடும்பங்களை சேர்ந்த 630 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 20 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ்ப்பாண மாவட்ட உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
No comments