பரபரப்பு:கிணறு கீழ் இறங்கியது
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் பொது கிணறு ஒன்று தாழிறங்கியதால் அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டது.
பொலிகண்டி தெற்கு கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பொது கிணறே சுமார் 40 அடி வரை தாழிறங்கி உள்ளது.
இதனையடுத்து யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும் அப்பகுதி மக்களும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
Post a Comment