வருமானம்:பேராசிரியர்கள் வெளியேற்றம்?

 


இந்த வருடத்தில் மாத்திரம் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 1,800 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 800 பேர் இலங்கையில் பல்கலைக்கழக சேவையிலிருந்து நிரந்தரமாக வெளியேறியுள்ளதாக அதன் பேச்சாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார். 

ஏனைய 1,000 பேர் கல்வி விடுமுறையில் வெளிநாடு சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகங்களில் வசதிகள் இன்மை பாரிய நெருக்கடியாக மாறியுள்ளதாக சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்

No comments