கடும் நடவடிக்கையாம்!
வடக்கு கிழக்கில் எதிர்வரும் நாட்களில் மாவீரர் தினத்தை சட்டப்பூர்வமற்ற ரீதியில் அனுட்டிப்பவர்கள் தொடர்பில் பொதுச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக காவல்துறை மா அதிபர் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பணியகத்தின் பணிப்பாளர் ஆகியோர் இன்று (24) மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளித்துள்ளனர்.
வடக்கு மற்றும் கிழக்கில் எதிர்வரும் 27ஆம் திகதி நடத்தப்படவுள்ள மாவீரர் வைபவங்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த உத்தரவு பிறப்பிக்குமாறு இராணுவத்தின் ஓய்வுபெற்ற புலனாய்வு அதிகாரியினால் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டது.
இதனிடையே மாவீரர் மாதத்தில் வடக்கு- கிழக்கில் இராணுவத்தினரதும் பொலிஸாரினதும் கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாகவும் அச்சுறுத்தல்களும் விசாரணைகளும் பரவலாக அரங்கேற்றப்படுவதாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
Post a Comment