2,373 கி.மீ தொலைவில் உள்ள இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவிய ஹவுதி போராளிகள்!!


ஏமனில் இயங்கும் ஹவுதி அமைப்பினர் 2,373 கிலோ மீற்றர் தெலைவில் உள்ள இஸ்ரேல் மீது தரையிலிருந்து நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை மூலம் தாக்குதல்களை இன்று நடத்தியுள்ளனர். இத்தாக்குதல்கள் நடந்துவதற்கு முன்னர்ஆளில்லா விமானங்கள் மூலமும் தெற்கு இஸ்ரேல் மீது தாக்குதல்கள் ஹவுதி அமைப்பினர் நடத்தினர் பின்னர் இந்த ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

ஹவுதி அமைப்பினரால் ஏவப்பட்ட நீண்டு தூர ஏவுகணையை செங்கடலில் வைத்து இடைமறித்து அழித்தாக இஸ்ரேல் இராணுவம் கூறுகிறது. ஏவுகணை வருவதை அவதானித்த இஸ்ரேலிய இராணுவம் வான்படையை அனுப்பி போர் விமானங்களிலிருந்து ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணையைச் செலுத்தி இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.

இத்தாக்குதல்களுக்கு ஹவுதி போராளிகள் உரிமை கோரியுள்ளன. அத்துடன் இன்னும் அதிகமான ஏவுகணைகள் உள்ளன அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து ஏவுகணைகளும் இஸ்ரேலின் எல்லைக்கு வெளியே தடுக்கப்பட்டதாகவும், இஸ்ரேல் எல்லைக்குள் விழவில்லை என்றும் கூறியுள்ளது. குறிப்பாக ஈலாட் நகருக்கு அருகே செங்கடலில் அடையாளம் தெரியாத வான்வழி இலக்கை அழித்ததாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்தது.

பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை மூலம் தாக்குதல் நடத்தப்படடதை ஹவுதி அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ஹாசாவில் நிறுத்தப்படும் வரை இது போன்று தாக்குதல்கள் தொடரும் என்று உறுதியளித்துள்ளது.


No comments