ஜபாலியா அகதிகள் முகாம் மீது வான்வழித் தாக்குதல்: 50 பேர் பலி!!


காசாவில் மக்கள் செறிவாக வாழும் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் நூற்றுக் கணக்கான பாலஸ்தீனிய மக்கள் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்தும் உள்ளனர் என காசாவின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அகதி முகாமிற்கு அருகில் உள்ள இந்தோனேசிய மருத்துமனையின் இயக்குனர் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர் என்று கூறியுள்ளார். எனினும் இறந்தவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மக்கள் செறிவான வாழும் ஜபாலியா அகதிகள் முகாமின் குடியிருப்புப் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் வடக்கு காசா வெற்றி பெற்றதாகக் கூறி, 50 ஹமாஸ் போராளிகளைக் கொன்றது என செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறினார்.  

மேற்கு ஜபாலியாவில் உள்ள ஹமாஸ் கோட்டை இஸ்ரேலிய படைகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஹமாஸ் தளபதி இப்ராஹிம் பியாரியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

வடக்கு காசா முழுவதிலும் நடந்த சண்டையை மேற்பார்வையிட்ட ஜபாலியா சென்டர் பட்டாலியனின் தளபதியாக இப்ராஹிம் பியாரி செயற்பட்டு வந்ததாகவும், கடைசி நாளில் சுமார் 50 ஹமாஸ் போராளிகளை இஸ்ரேலியப் படைகள் கொன்றதாக டேனியல் ஹகாரி கூறினார்.

No comments