பெண்களுக்கான பலோன் டி'ஓர் விருதை வென்றார் அய்டானா பொன்மதி
ஸ்பெயின் மற்றும் பார்சிலோனா மிட்பீல்டர் அய்டானா பொன்மதி முதன்முறையாக பெண்களுக்கான பலோன் டி'ஓர் விருதை வென்றுள்ளார்.
25 வயதான அவர் ஸ்பெயினின் டாப் ஃப்ளைட் மற்றும் சாம்பியன்ஸ் லீக்கில் தனது கிளப் வெற்றிபெற உதவியமை, கோடையில் உலகக் கோப்பையை அவரது நாடு வெல்ல உதவியமைக்காக இந்த விருது அவருக்கு கிடைத்தது.
ஆகஸ்ட் மாதம் யுஇஎஃப்ஏவின் (Uefa) ஆண்டின் சிறந்த வீராங்கனையாகவும் முடிசூட்டப்பட்டார்.
அவர் இப்போது பார்சிலோனாவுடன் நான்கு லீக் பட்டங்களையும் இரண்டு சாம்பியன்ஸ் லீக்களையும் வென்றுள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்த போட்டியில் பொன்மதி மூன்று கோல்கள் அடித்தார்.
பாலன் டி'ஓர் விருதை வென்றதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். கால்பந்து ஒரு கூட்டு விளையாட்டு. எனவே எனது குழு உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இந்த பரிசை நீட்டிக்க விரும்புகிறேன் என்று பொன்மதி கூறினார்.
இறுதியாக இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஏனைய 10 வீரர்களுக்கும் வாழ்த்துக்களைக் கூறியதுடன் அவர்களும் சிறந்த வீரர்கள் என்று அழைத்தார்.
முன்மாதிரியாக ஆடுகளத்திலும் வெளியேயும் எங்களுக்கு பொறுப்பு இருக்கிறது. நாங்கள் விளையாட்டு வீரர்களை விட அதிகமாக இருக்க வேண்டும் மற்றும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் மற்றும் சிறந்த, அமைதியான மற்றும் சமமான உலகத்திற்காக ஒன்றாக போராட வேண்டும் என்றார்.
Ballon d'Or விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 10 வீராங்கனைகள்
Post a Comment