8வது தடவையாக பலோன் டி'ஓர் விருதை வெற்றார் மெஸ்ஸி
அர்ஜென்டினா மற்றும் இண்டர் மியாமி முன்கள வீரர் லியோனல் மெஸ்ஸி எட்டாவது முறையாக ஆண்கள் பலோன் டி'ஓரை வென்றுள்ளார். இந்த விருதை அவர் 8வது முறையாக வெற்றுள்ளார்.
36 வயதான அவர் கடந்த ஆண்டு கத்தாரில் நடந்த உலகக் கோப்பையை தனது நாட்டுக்கு வெல்ல உதவினார். அதாவது அர்ஜென்டினாவை உலகக் கோப்பை மகிமைப்படுத்த உதவியதுடன், இண்டர் மியாமி அவர்களின் முதல் கோப்பையான லீக்ஸ் கோப்பையை வென்றதில் மெஸ்ஸி முக்கியப் பங்காற்றினார்.
இந்த தருணத்தை அனுபவிக்க மீண்டும் ஒருமுறை இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உலகக் கோப்பையை வென்று எனது கனவை நனவாக்கியிருக்கிறேன். நான் பெற்ற தொழில் மற்றும் நான் சாதித்த அனைத்தையும், வரலாற்றில் சிறந்த அணியில் ஒரு பகுதியாக இருக்க எனக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. நான் பெற்ற அனைத்து பாலன் டி'ஓர் விருதுகளும் வெள்வேறு காரணங்களுக்காக சிறப்ப வாய்ந்தவை என்று மெஸ்ஸி கூறினார்.
21 வயதுக்குட்பட்ட உலகின் சிறந்த வீரருக்கான கோபா டிராபியை இங்கிலாந்து மற்றும் ரியல் மாட்ரிட் மிட்பீல்டர் ஜூட் பெல்லிங்ஹாம் வென்றனர்.
மான்செஸ்டர் சிட்டி ஃபார்வர்ட் எர்லிங் ஹாலண் இரண்டாவது இடத்தைப் பெற்றார்.
பிரான்ஸ் முன்கள வீரர் கைலியன் எம்பாப்பே - அர்ஜென்டினாவிடம் 4-2 பெனால்டி ஷூட் அவுட் தோல்வியில் உலகக் கோப்பை இறுதி ஹாட்ரிக் கோல் அடித்த இரண்டாவது நபர் ஆனார். இவர் மூன்றாவது இடத்தைப் பெற்றார்.
பலோன் டி'ஓர் விருதுகளை கிறிஸ்டியானோ ரொனால்டோ ஐந்து முறை வென்றுள்ளார். சவுதி அரேபியாவில் அல் நாசர் அணிக்காக விளையாடும் போர்ச்சுகல் சர்வதேச வீரர், 2003 க்குப் பிறகு முதல் முறையாக தேர்வுப்பட்டியலில் பெயரிடப்படவில்லை.
Post a Comment