பாரிஸ் தொடரூந்து நிலையத்தில் மிரட்டிய பெண் மீது துப்பாக்கிச் சூடு


பிரான்சில் பர்தா அணிந்த நிராயுதபாணியான இஸ்லாமியப் பெண் மீது காவல்துறையினர் 8 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்குக் காயமடைந்தவர் 38 வயதுடைய பெண் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அவரின் வயிற்றில் சத்திர சிகிற்சை செய்யப்பட்டது. 

இன்று செவ்வாய்க்கிழமை ibliothèque François-Miterrand மெற்றோ நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போருடன் தொடர்புடைய பிரான்சில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

குறித்த பெண் தொடர்பில் தொடரரூந்தில் பயணிகளால் எச்சரிக்கை எழுப்பப்பட்டது. SNCF தொடரூந்து இயக்குனருக்கு பயணிகளிடமிருந்து குறைந்தபட்சம் மூன்று தொலைபேசி அபாய அழைப்புகள் வந்துள்ளதாகவும் பின்னர் இவ்விடயம் காவல்துறைக்கு எச்சரிக்கப்பட்டது. 

இதுகுறித்து இதனைத் தொடர்ந்து நிலக்கீழ் தொடரூந்துக்கு விரைந்த வந்த காவல்துறையினர் குறித்த பெண் தொடர்பில் தலையிட்டனர். அந்தப் பெண்ணை சோதனையிட முயன்றனர். குறித்த பெண் காவல்துறையினருக்கு உத்தரவுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. அத்துடன் அப்பெண் அல்லாஹு அக்பர் என்று கத்தியதாக கூறப்படுகிறது. அத்துடன் தன்னை வெடிக்கச் செய்துகொள்வதாக காவல்துறையினரை மிரட்டியுள்ளார் இந்நிலையில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் அவர் வயிற்றுப் பகுதி மீது எட்டு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.


காயமடைந்த குறித்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அப்பெண்ணிடம் வெடிபொருட்கள் அல்லது வேறு ஆயுதங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இச்சம்பவத்தைத் தொடருந்து நிலக்கீழ் தொடருந்து நிலையம் முற்றாக மூடப்பட்டது.

இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அதிகாரிகளால் இரண்டு விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒன்று அந்தப் பெண்ணின் செயல்களைப் பற்றியது, மற்றொன்று காவல்துறையால் துப்பாக்கிப் பிரயோகம் நியாயமானதா என்பதைத் தீர்மானிப்பது.

அதிகாரிகளின் பாடி கேமராக்கள் மற்றும் தொடரூந்து நிலையத்தில்  உள்ள சிசிடிவி கமராக் காட்சிகள் வழக்கின் உண்மைகளை துல்லியமாக நிறுவ உதவும் அரச சட்டவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ரோந்து செல்லும் காவல்துறையினரை அஞ்சுறுத்தியதற்காக அப்பெண் தண்டனை பெற்றிருந்தாகக் கூறப்படுகிறது. அத்துடன் அவரின் மனநலம் குறித்தும் கேள்வி எழுப்பட்டுள்ளது. அந்தப் பெண் ஒரு கட்டத்தில் தீவிரமயமாக்கல் கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தார். இருப்பினும் அவரது பெயர் இன்னும் பட்டியலில் உள்ளதா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்று இரண்டு காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments