பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரை மிரட்டி 15 இலட்சத்தை பறித்த கும்பல்


பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவிடம், அவரை கொலை செய்வதைத் தவிர்ப்பதற்காக 15 இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரப்பட்டுள்ளது.

இவ்வாறு இலஞ்சம் கோரிய கும்பல் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பாதாள உலகத் தலைவர் “புளூமெண்டல் சங்க” எனக் கூறப்படும் நபர் ஒருவரிடமிருந்து தனது கையடக்கத் தொலைபேசிக்கு நேற்று அழைப்பு வந்துள்ளது.

அவரைக் கொல்வதற்கு ஒருவர் 80 இலட்சம் ரூபாவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் அதனை செயற்படுத்தாமல் இருக்க 15 இலட்சம் ரூபாய் கோரியதாகவும் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி மூலம் வழங்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு அமைய 15 இலட்சம் ரூபாயை கிருலப்பனையில் உள்ள தனியார் வங்கிக் கிளைக்கு அருகில் உள்ள இடத்தில வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

நீல நிற அல்டோ காரில் இருவர் பணத்தை எடுத்துச் சென்றதாக ஜனக ரத்நாயக்கவின் ஊழியர் போலீசாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சந்தேகநபர்கள் அடையாளம் காணப்படாத நிலையில், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்வதாக கிருலப்பனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments