ஜனாதிபதித் தேர்தலுக்காக 11 பில்லியன் ரூபா
அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்காக 11 பில்லியன் ரூபாயை ஒதுக்குமாறு நிதி அமைச்சிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.
தேர்தல் நடத்தப்படுமானால், குறிப்பிட்ட ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து நிதியை ஒதுக்குமாறு நிதியமைச்சிடம் கோருவது பொதுவான நடைமுறை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தல் பொருத்தமான காலத்தில் நடத்தப்படும் என்றும் அந்த காலத்திற்குள் தேர்தல்கள் ஆணைக்குழு தேவையான ஏற்பாடுகளைச் செய்யும் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க முன்னதாக தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதித் தேர்தலை சரியான நேரத்தில் அறிவிக்க தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இருந்தாலும் தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விவகாரங்களில் என்ன நடக்கும் என்பதை அவர்களால் கணிக்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.
Post a Comment