செம்மணிப் புதைகுழி குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ?


செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கை, பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பாரப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாணப் பொலிஸாராலேயே தற்போது இந்த வழக்கு கையாளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் செம்மணிப் புதைகுழிவழக்கை ஒப்படைக்க பொலிஸ் தரப்பால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று நம்பகரமாக அறிய முடிகின்றது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர தலைமையிலான குழுவினர், ஈஸ்டர் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான வழக்குகளைத் தற்போது விசாரித்து வருகின்றனர். இவ்வாறிருக்கையில், செம்மணிப் புதைகுழி வழக்கு அவர்களின் கீழ் ஒப்படைக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் இந்த விடயத்தில் மிகுந்த எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments