வெளிநாடு அனுப்புவதாக 80 இலட்சம் மோசடி - யாழில் ஒருவர் கைது


அம்பாறை பகுதியை சேர்ந்த இளைஞனை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 80 இலட்ச ரூபாய் மோசடி செய்த யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரை கோப்பாய் பொலிஸார் நேற்றைய தினம் திங்கட்கிழமை  கைது செய்துள்ளனர். 

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் அம்பாறை பகுதியை சேர்ந்த இளைஞனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 80 இலட்ச ரூபாயை கட்டம் கட்டமாக பெற்றுள்ளார். 

பணத்தினை பெற்றுக்கொண்டு இளைஞனை வெளிநாட்டுக்கு அனுப்பாது ஏமாற்றி வந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞன் அம்பாறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். 

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த அம்பாறை பொலிஸார் , கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொக்குவில் பகுதியில் சந்தேகநபர் உள்ளதாக அறிவித்ததை அடுத்து , பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சந்தேகநபரை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபரை மேலதிக விசாரணைக்காக அம்பாறை பொலிசாரிடம் கோப்பாய் பொலிஸார் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். 

No comments