முடியாதென்கிறார் டக்ளஸ்!யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் யாழ் மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற போது கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தவிர்ந்த யாழ் மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் கலந்து கொள்ளவில்லை .

நேற்று செவ்வாய்கிழமை அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எருவரும் கலந்து கொள்ளவில்லை .

இந்நிலையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் கலந்து கொள்ளவில்லை .

இதனிடையே யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று இடம்பெற்றிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஒருங்கிணைப்புகுழு கூட்டத்திற்கு சமூக மளிக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் விக்கேஸ்வரன் சார்பில் யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் வி மணிவண்ணன் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments