ஸ்பெயின் பள்ளியில் கத்திக்குத்து: ஐவர் காயம்!!
ஸ்பெயினில் பள்ளி ஒன்றில் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பலமுறை கத்தியால் குத்தப்பட்டுள்ளனர். சந்தேக நபர் 14 வயதுடைய மாணவன் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஸ்பெயினில் உள்ள Jerez de la Frontera என்ற இடத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சந்தேகநபரான மாணவன் பள்ளியில் வகுப்புத் தொடங்கியதுடன் பையில் மறைத்து வைத்திருந்து இரு கத்திகளை எடுத்து ஆசிரியரைத் துரத்திச் சென்று கண்ணில் குத்தியுள்ளார். இதேநேரம் இதைத் தடுக்கச் சென்ற சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களையும் கத்தியால் குத்தியுள்ளார்.
கத்திக்குத்து மூன்று ஆசிரியர்களும் இரு மாணவர்களும் காயமடைந்தனர்.
தாக்குதல் நடத்திய மாணவன் மறைந்திருந்த நிலையில் பாடசாலை கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் காவல்துறையினர் கண்டுபிடித்துக் கைது செய்துள்ளனர். சந்தேகநபரான மாணவன் பயன்படுத்திய இரு கத்திகளையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டமாணவன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதேநேரம் காயமடைந்தவர்களில் நால்வர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கத்திக்குத்துக்கு உள்ளான ஆசிரியர் ஒருவருக்கு கண் அறுவைச் சிகிற்சை தேவைபடுவதாக பிராந்திய கல்வி அமைச்சர் பாட்ரிகாசியா டெல் போசோ தெரிவித்தார்.
மற்றைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது, ஸ்பெயின் வன்முறைக் குற்றங்களின் விகிதம் குறைவாக உள்ளது.
நேற்று முன்தினம் பிரித்தானியாவில் குறைடன் நகரில் மாணவி ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்தார் என்பது நினைவூட்டத்தக்கது.
Post a Comment