நெதர்லாந்தில் 3 பேர் சுட்டுக்கொலை!!


நெதர்லாந்து ரோட்டர்டாம் நகரில் நேற்று வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

துறைமுக நகரத்தில் உள்ள வீட்டில் இரண்டு பேர் சுடப்பட்டனர். மூன்றாவது நபர் எராஸ்மஸ் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் சுடப்பட்டார்.

நகரின் இருவேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பலர் அதை நேரில் பார்த்துள்ளனர்.

சந்தேக நபர் இராணுவ உடை மற்றும் குண்டு துளைக்காத அங்கியை அணிந்திருந்த 32 வயதுடைய தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர் என்றும், சந்தேகநபர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

முதல் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சந்தேக நபர் 39 வயதுடைய பெண்ணை சுட்டுக் கொன்றார். அந்த பெண்ணின் 14 வயது மகளும் படுகாயமடைந்து பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சந்தேக நபர் பின்னர் எராஸ்மஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் வகுப்பறைக்குச் சென்றதாகக் கருதப்படுகிறது. அங்கு அவர் 46 வயதான விரிவுரையாளரைக் கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது.

No comments