பயிர்ச்செய்கை இல்லை!



யாழ் மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் இருந்து விடுவிக்கப்பட உள்ள காணிகளில் பயிர்செய்கைகளை நடவடிக்கைகளை பொதுமக்கள் ஆரம்பிக்கலாம் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நேற்றைய தினம் புதன்கிழமை யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் முதற்கட்டமாக அடையாளப்படுத்தப்பட்ட காணிகள் மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.

குறித்த செயற்பாடானது பிரதேச செயலக அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளும் இணைந்து அதற்கான வேலைத்திட்டங்களை நிறைவு செய்துள்ளனர்.

ஆகவே விடுவிக்கப்பட உள்ள காணிகளில் பயிர் செய்கை நடவடிக்கைகளுக்கைகளை மேற்கொள்ள இருக்கும் பொது மக்கள் தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கலாம் என அமைச்சர்  மேலும் தெரிவித்தார்.

குறித்த கூட்டத்தில் வட மாகாண ஆளுநர் பிஎஸ்எம் சாள்ஸ் ,ஜனாதிபதி செயலகத்தின் வட மாகாண மேலதிக செயலாளர் எஸ் இளங்கோவன்,வட மாகாண அவைத் தலைவர் சி வி கே சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் பிரத்தியோக செயலாளர் இராமநாதன், மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ,பிரதேச செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்

No comments